fbpx

எச்சில் தடவி சப்பாத்தி தயாரித்த நபர்… வீடியோ வைரலான நிலையில் கைது..

பொதுவாக ஹோட்டல் உணவு என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம்.. ஆனால் அதை எப்படி தயாரிக்கின்றனர் என்று பார்த்தால், ஹோட்டல் உணவை விரும்பி சாப்பிடுவார்களா என்பது சந்தேகம் தான்.. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒருவர் எச்சில் தடவி சப்பாத்தி தயாரிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. காஜியாபாத்தில் உள்ள சாஹிபாபாத் பகுதியில் உள்ள ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது..

இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், உத்தரப்பிரதேச காவல்துறையினர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.. எச்சில் தடவி சப்பாத்தி தயாரித்த தசீருதீன் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. இதுகுறித்து சாஹிபாபாத் காவல் கண்காணிப்பாளர் பூனம் மிஸ்ரா கூறுகையில், “ஒரு நபர் எச்சில் தடவி சப்பாத்தி தயாரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. அந்த புகாரின் பேரில் அவரை கைது செய்துள்ளோம்.. அவரிடம் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

“ ஆளுநரை ஒருமையில் பேசியதற்காக முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்..” பாஜக செயற்குழுவில் தீர்மானம்..

Fri Jan 20 , 2023
பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது.. தமிழக பாஜக தலைவர் அண்னாமலை, மூத்த தலைவர்கள் ஹெச், ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.. வேறு யாருக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. குறிப்பாக சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக அராஜகம் நடந்ததாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும் ஆளுநரை ஒருமையில் பேசியதற்காக […]

You May Like