fbpx

குக்கர் வெடிகுண்டுடன் போட்டோ எடுத்துக்கொண்ட குற்றவாளி!! புகைப்படம் வைரல்!!

மங்களூருவில் குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்ட நபர் குக்கருடன் போட்டோ எடுத்துள்ளதாக வெளியாகும் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது இதில் பயணி மற்றும் ஓட்டுனர் காயம் அடைந்தனர். இதை பயங்கரவாத சம்பவம் என்று கார்நாடகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கம்பளம் பகுதியில் விடுதியில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜீம்ரகுமான் என்ற இளைஞரை கேட்டாறு காவல்நிலையத்திற்கு அழைத்துவந்துகாவல்துறை சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர் கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டம் தீர்த்தள்ளி பகுதியை சேர்ந்த முகமது ஷெரீப்(24) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தன் பெயரில் சிம்கார்டு வாங்காமல் உதகையை சேர்ந்த ஆசிரியர் சுரேந்தரின் ஆவணங்களை வைத்துகோவையில் சிம்கார்டு வாங்கியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு முன்பு ஷெரீப் கோவை சிங்காநல்லூர் பகுதியில் ஒரு விடுதியில் அறை எடுத்து பல நாட்கள் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான ஜமோஷா முபீனுக்கும், இவருக்கும் ஏற்கனவே தொடர்ந்து இருந்ததா என்பது குறித்து, ஐ.எஸ். உடனான தொடர்புகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

https://twitter.com/BBTheorist/status/1594599464102395905?s=20&t=KX0rCuJ3BHD-jWH67EXSUA

இந்நிலையில், ஷெரீப் வீட்டில் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. குற்றவாளியாக கருதப்படும் ஷாரீக், கடைசியாக குக்கர் வெடிகுண்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

நளினி உள்பட 6 பேர் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி மறு ஆய்வு மனுதாக்கல் செய்ய முடிவு…!!

Mon Nov 21 , 2022
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்ய உள்ளது. ராஜீவ்காந்தி படுகொலையான வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு கைதானவர்களில் நளினி,முருகன்,சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட்பயஸ் உள்ளிட்ட 6 பேர் கடந்த 11ம் தேதி விடுவிக்கப்பட்டனர். படுகொலை வழக்கில் 7 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நன்னடத்தை காரணமாக பேரறிவாளன் கடந்த மே […]

You May Like