fbpx

3-வது பிரசவத்திற்கு ஊதியத்துடன் பேறுகால விடுப்பு…? உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு…!

3-வது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் அரசு பணிகளில் பணியாற்றும் பெண்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி சமிபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்திய மகப்பேறு உதவிச் சட்டம் 1961-இன் படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வார காலம் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது.

அதனை 2016 ஆம் ஆண்டு திருத்திய மத்திய அரசு மகப்பேறு காலத்தை 26 வாரங்களாக உயர்த்தியது. அதற்குப் பிறகும் உடல்நலப் பாதிப்புகள் ஏதேனும் இருந்தால், மருத்துவரின் சான்றிதழோடு கூடுதலாக 12 வாரங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த சலுகைகளை அனைத்தும் முதல் 2 குழந்தைகளுக்கு பொருந்தும்.

இந்த நிலையில் மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்கக் கோரிய அரசு ஆசிரியை ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் தங்கள் செய்திருந்த. பேறுகால விடுப்பு வழங்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற நிலையில், கணவர் இறந்து மறுமணம் செய்த பின்னர் கருவுற்றதால் பேறுகால விடுப்பு கோரிய ஈரோடைச் சேர்ந்த ஆசிரியையின் கோரிக்கை அரசால் நிராகரிக்கப்பட்டது. அரசின் நிராகரிப்பை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்த நிலையில், மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Vignesh

Next Post

பாகிஸ்தான் கொடியில் இருந்து நமது சின்னத்தை அகற்ற வேண்டும்…! "இந்து நாடாக அறிவிக்க வேண்டும்"...! இந்து மகாசபை தலைவர் சர்ச்சை பேச்சு..

Tue Aug 29 , 2023
சந்திரனை இந்து நாடக அறிவிக்க வேண்டும் மேலும் பாகிஸ்தான் தீவிரவாதத்தை காய் விட வேண்டும் இல்லையெனில் கொடியிலிருந்து நமது சின்னத்தை அகற்ற வேண்டும், என இந்து மகாசபை தலைவர் வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்து மகா சபையின் தேசிய தலைவர், சுவாமி சக்ரபாணி மகாராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், அதில், ‘’சந்திரயான்-3 வெற்றிகரமாக தரை […]

You May Like