மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியில் 4 பெண்கள் சேர்ந்து நிலை தடுமாறிய குடிபோதையில் அருகில் இருந்த மற்றொரு பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவலாக வைரலாகி வருகின்றது. இந்த சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 4) அன்று நள்ளிரவு 1 மணி அளவில் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அந்த 4 பெண்களும் மது போதையில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் முடியை பிடித்து இழுத்து வேகமாக கீழே தள்ளி, காலால் மிதித்தும், முகத்தில் குத்தியும், பெல்ட்டால் அடித்தும் பயங்கரமாக காயப்படுத்தியுள்ளார்கள். அருகில் உள்ள பலரும் காப்பற்ற முயற்சி கூட செய்யாமல் அவர்கள் அடிப்பதை பார்த்துக் கொண்டு மட்டுமே நின்று கொண்டிருந்தார்கள்.
பாதிக்கப்பட்ட பெண் அருகில் இருந்த போலிசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது “எந்தவித காரணமும் இல்லாமல் 4 பெண்கள் என்னை தாக்கினார்கள்” என அந்த பாதிக்க பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அந்த 4 பெண்கள் மீதும் வேண்டுமென்றே பிறரை காயப்படுத்துதல், ஆபாசமான செயல் என்ற பிரிவுகளின் அடிப்படையில் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.