மேகாலயாவில் இரவு முழு நேர ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மேகாலயாவில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. எனினும், பெரும்பான்மைக்கு இன்னும் 5 தொகுதிகள் தேவை என்பதால் தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சியை அமைக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் மார்ச் 2 அன்று, தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை காரணமாக, கிழக்கு மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு உத்தரவின் போது, மவ்சாவா, சாங்ஷாங், உம்விச்சுப் மற்றும் மைராங் மிஷன் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் 5 பேருக்கு மேல் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.