fbpx

ஆண்களுக்குதான் அதிக பாதிப்பு!. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது கை, கால்களில் ஏற்படும் 7 எளிய அறிகுறிகள் இதுதான்!

cholesterol: உயர் கொலஸ்ட்ரால் பிரச்சினை ரத்த அழுத்தத்தில் மட்டும் இடையூறு செய்வதில்லை. இதய ஆரோக்கியத்தையும் பெரிய அளவில் பாதிககும். கொழுப்பு சத்து நம் உடலுக்கு நல்லது. ஆனால் கெட்ட கொலஸ்ட்ரால் நம் இதயம் ஆரோக்கியம். உடல் பருமன் உள்ளிட்ட பலவற்றுக்கும் நல்லதல்ல.சர்க்கரை அளவை நாம் தவறாமல் பரிசோதிப்பது போல, நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை சரி பார்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதை அலட்சியம் செய்வது இதயத்தில் பிரச்சனையை உண்டாக்குகிறது குறிப்பாக ஆண்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாக இருக்கிறது.

கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகும் போது, ​​நமது உடலின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றும். முக்கியமாக கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வுடன் தொட்டாலே அதிக சென்சிடிவ்வாக இருக்கும். கை, கால்களில் ரத்த ஓட்டம் சரியில்லாததால் இவ்வகை பிரச்சனை தோன்றி அது எதிர்காலத்தில் இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதன் முக்கிய அறிகுறிகளில் ஒன்று இது. திடீரென கை, மற்றும்கால் விரல்கள் ஜில்லென்று குளிர்ச்சியாக மாறிவிடும். மோசமான ரத்த ஓட்டம் காரணமாக இப்படி நடப்பது இயல்பானது. ஆனால் அதிகமாக கொலஸ்டிரால் பிரச்சினை காரணமாகவே இது நடக்கிறது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும்போது, ​​உடலில் ரத்த ஓட்டம் குறையும். இதனால் கைகள் மற்றும் விரல்களில் பலவீனம் அல்லது சோர்வு இருக்கும். கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது, சிறிய வேலைகள் கூட பாரமாக இருக்கும். கைகள் மரத்துப் போனது போல ஆகிவிடும்.

காலையிலோ அல்லது இரவில் உறங்கும் போதோ கைகள் மற்றும் விரல்களில் திடீரென எரியும் உணர்வு ஏற்படலாம். அப்படி இருந்தால் நம் உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருப்பதைக் குறிக்கிறது என்று அர்த்தம். உடனே மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். கை, கால், விரல்களில் சருமத்தின் நிறம் திடீரென மாறி நீல நிறமாக மாறினால், உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். இப்படி நிறமாற்றம் ஏற்படும் போது உடலின் ரத்த ஓட்டமும் மெதுவாகும்.

காரணமே இல்லாமல் திடீரென கைகள் மற்றும் கால்களில் தொடர்ந்து குத்தல் உணர்வு மற்றும் மார்பில் அசௌகரியம் ஏற்படுவது ஆகிய அறிகுறிகள் வெளிப்படும். மூச்சுத் திணறல், தலைசுற்றல், இவை கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போதும் ஏற்படும். இந்த அறிகுறிகள் மாரடைப்புக்கும் வழிவகுக்கும். இதய நோய்களின் அறிகுறிகளில் முக்கியமான ஒன்று உயர் கொலஸ்ட்ரால் பிரச்சினை. உயர் கொலஸ்ட்ரால் பிரச்சினை சரியான நேரத்தில் நீங்கள் கண்டறியாத போது, இதய நோய்கள் வரும்போது அறிகுறிகள் தெரியாமல் கூட போகக் கூடும். அதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சினையை சரியான நேரத்தில் கண்டறிய வேண்டும்.

Readmore: கெமிக்கல் இல்லாத குங்குமம்..!! இனி ஈசியா நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்..!! எந்த பக்க விளைவுகளும் வராது..!!

English Summary

Men are more affected! These are the 7 simple symptoms that occur in the hands and feet when bad cholesterol is high!

Kokila

Next Post

ஜாக்பாட்!. திருமணமாகாத, மனைவியை இழந்த ஆண்களுக்கு மாதம் ரூ.5000 பென்ஷன்!. புதிய திட்டம் அறிமுகம்!. விண்ணப்பிப்பது எப்படி?

Thu May 8 , 2025
Jackpot!. Rs.5000 monthly pension for unmarried and widowed men!. New scheme introduced!. How to apply?

You May Like