நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. இதனால் பல முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன.. இந்த காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3N2 மாறுபாடு தான் காரணம் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது..
கொரோனா போன்ற அறிகுறிகளுடன் பரவும் இந்த காய்ச்சல், 3 நாட்களில் குணமானாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய 3 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது..
H3N2 காய்ச்சலால் யாருக்கு அதிக ஆபத்து..?
- 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
- 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள்
- ஆஸ்துமா அல்லது சுவாச நோய் நோயாளிகள்
- நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் கொண்டவர்கள்
- அனீமியா போன்ற இரத்தக் கோளாறுகள் உள்ளவர்கள்
- நாள்பட்ட நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்
- உடல் பருமன் உள்ளவர்கள்
- இதயம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் கோளாறுகள் உள்ளவர்கள்
காய்ச்சலிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி..? இந்த காய்ச்சலில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மற்றும் பாதுகாப்பது குறித்து ஒரு முக்கியமான ஆலோசனையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.. அதன்படி, மக்கள் நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்.. சோப்பு அல்லது சானிடைசர் மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.. அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் பராமரிக்க வேண்டும்.
காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டால், பாராசிட்டமால் பயன்படுத்தலாம்.. மேலும் மற்றவர்களுடன் கைகுலுக்கக்கூடாது என்றும், மருத்துவர் ஆலோசனையின்றி சுயமாக மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. ஆண்டிபயாடிக் மற்றும் பிற மருந்துகளை மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே எடுக்க வேண்டும்..” என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது..