fbpx

#Rain Alert: இன்று இந்த 5 மாவட்டத்தில் மட்டும் கனமழை எச்சரிக்கை…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்து குறிப்பில்; மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழ்நாடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 18-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்று லட்சத்தீவு பகுதி, கேரளா – கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், தமிழ்நாடு கடலோரப்பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

"சூப்பர் அறிவிப்பு" கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு...! முழு விவரம் உள்ளே...

Fri Jul 15 , 2022
தமிழக அரசு அறிவித்த மாணவியர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 18 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் மாணவியர்களின் விபரங்களை ஜூன் 30-ம் தேதி வரையில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர், இதற்கான காலக்கெடு ஜூலை 10-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. பலர் இதற்கான விண்ணப்பங்களை இன்னும் பதிவு செய்யாமல் இருப்பதால் விண்ணப்பிக்க கால அவகாசத்தை வருகின்ற 18ஆம் தேதி […]

You May Like