fbpx

எல்லாம் உஷாரா இருங்க… இந்த 13 மாவட்டங்களில் கனமழை..‌‌.! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை…!

தமிழகத்தில் திருப்பத்தூர், கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களின் மலை பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தொடர்ந்து நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். முக்கியமாக நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலை பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பாலில் இதை சேர்த்து குடித்தால் போதும்.. உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள்...

Wed Jul 20 , 2022
பூண்டு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு மருந்தாகவும் கருதப்படுகிறது, இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், உப்புகள் மற்றும் ஆரியம் பல நோய்களை சமாளிக்க உதவுகிறது.. இதே பால் குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது மிகவும் நன்மை பயக்கும், இதை குடிப்பது பல நோய்களையும் நீக்குகிறது, ஆனால் நீங்கள் பூண்டை பாலில் கொதிக்க வைத்து குடித்தால், அதன் நன்மைகள் பன்மடங்கு அதிகரிக்கும். பூண்டு பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் […]

You May Like