fbpx

“எம் ஜி ஆரா.? அரவிந்த் சாமியா.? பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாங்க.”! எம்ஜிஆர் பிறந்த நாள் விழா போஸ்டரில் குழப்பம்.!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் நிறுவனருமான மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழா தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்ஜிஆர் பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு பதிலாக அரவிந்த்சாமியின் படத்தை பேனரில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினர் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனரில் எம்ஜிஆர் போட்டோக்கு பதிலாக நடிகர் அரவிந்த்சாமியின் புகைப்படம் இடம் பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தலைவி படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அரவிந்த்சாமி. அந்தப் புகைப்படத்தை எம்ஜிஆருக்கு பதிலாக பேனரில் அச்சடித்த சம்பவம் தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது. இந்த பேனர் புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கேலி செய்து வருகின்றனர்.

Next Post

சிவகங்கையில் அதிர்ச்சி..!! மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் சிறுவன் உள்பட இருவர் பலி..!!

Wed Jan 17 , 2024
சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ஆண்டுதோறும் தை மாதம் 3ஆம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டு வருகிறது. புகழ் பெற்ற இந்த மஞ்சுவிரட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், சிராவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் வலயபட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தான். காளை முட்டியதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கரன் என்ற அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதேபோல், இதேபோல், மஞ்சுவிரட்டு போட்டியில் 35 வயதான […]

You May Like