அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், ரூபாய் 2 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த அறிவியல், கணிணி ஆய்வு கூடங்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தமிழக முதலமைச்சரின் நடவடிக்கையால் அவர் மீது நம்பிக்கை கொண்டு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசு பள்ளிகளில் சேரும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிலுள்ள LKG,UKG, வகுப்புகளில் ஏற்கனவே 93,000 மாணவ, மாணவிகள் படித்தனா். தற்போது, கூடுதலாக 52,000 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனா். அவர்களுக்கு முன்பு எப்படி பாடம் எடுக்கப்பட்டதோ, அதை முறையைப் பின்பற்றுமாறு கூறியுள்ளோம். தற்போது, சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயரும் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிதாக கூடுதல் ஆசிரியர் நியமனமும், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் அடுத்தடுத்து திறக்கப்பட்டும் வருகிறது. தமிழகம் முழுவதும் இத்தகைய கல்வி வளர்ச்சிக்காகவும், பள்ளிக் கூடங்கள் மேம்படவும் அந்த பகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்தினரும், தன்னார்வலர்களும் உதவிட வேண்டும்’ என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
Also Read: இந்தியாவில் சமஸ்கிருத மொழியை கற்பதற்கு மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர்