அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெண் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். இந்நிலையில் நேற்று தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமில் கலந்து கொண்ட பெண் ஒருவர் அமைச்சரிடம் மனு கொடுக்க வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை அவமரியாதை செய்யும் விதமாக தன்னிடம் மனு அளிக்க வந்த அவரை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அவரது இந்த செயலுக்கு எதிர்க்கட்சியினர் தனது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்; மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
Also Read: வைரஸ் தொற்றுக்கும் மூளை புற்றுநோய் தீவிரமடைவதற்கும் இடையே உள்ள தொடர்பு…! IIT புதிய கண்டுபிடிப்பு