fbpx

முக்கிய அறிவிப்பு… மிஷன் வாத்சல்யா திட்டத்திற்கான புதிய வழிகாட்டு நெறிமுறை…! மத்திய அரசு வெளியீடு…!

மிஷன் வாத்சல்யா திட்டத்திற்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக, 2009-10-ம் ஆண்டு முதல், மத்திய நிதியுதவி திட்டமான ‘மிஷன் வாத்சல்யா’ என்ற குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. ‘மிஷன் வாத்சல்யா’வின் நோக்கம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தைப் பாதுகாப்பது, அவர்களின் முழுத்திறனை கண்டறிந்து, முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை உறுதி செய்தல், குழந்தைகள் வளர்ச்சிக்கு ஆதரவான மற்றும் ஏற்புடைய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல், இளம் சிறார் நீதிச்சட்டம் 2015-ஐ செயபல்படுத்துவதில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உதவுதல் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது, கடினமான சூழல்களில், நிறுவனம் சாராத பராமரிப்பை ஊக்குவிப்பது.

மிஷன் வாத்சல்யா’ சட்டப்பூர்வ அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், சேவை அளிக்கும் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், உயர்தர நிறுவன பராமரிப்பு மற்றும் சேவை அளித்தல், நிறுவனம் சாராத சமூக ரீதியான பராமரிப்பை ஊக்குவித்தல், அவசரகால சேவைகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடுகளை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

Vignesh

Next Post

நற்செய்தி.. இனி ஓட்டுநர் உரிமம் எடுக்க இனி ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்ல வேண்டாம்..

Mon Aug 8 , 2022
ஓட்டுநர் உரிம பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மிகவும் எளிமையாக்கியுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.. இந்த புதிய விதிகள் மூலம் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு (ஆர்டிஓ) சென்று மிகப்பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேவைகளில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப, ஆர்டிஓவுக்குச் சென்று இனி நீங்கள் எந்த வகையான ஓட்டுநர் சோதனையையும் எடுக்க […]

You May Like