fbpx

கொடூரம்.! “காதலன் ரேப்…” தற்கொலை செய்துக்கொள்ள சென்ற காதலி.! 9 பேர் கதற கதற கற்பழிப்பு…!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் மைனர் பெண் 11 பேரால் அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் 11 பேரை கைது செய்து அவர்களைப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சம்பவம் நடந்த தினத்தன்று ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரை அவரது காதலர் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். அங்கு வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு தனது நண்பரையும் அழைத்து வந்து பாலியல் வன்புணர்வு செய்ய வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய பெண் தற்கொலை செய்வதற்காக கடற்கரைக்கு சென்று இருக்கிறார்.

அங்கிருந்த போட்டோகிராபர் ஒருவர் அந்தப் பெண்ணிற்கு ஆறுதல் சொல்வது போல நடித்து தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த போட்டோகிராபர் நண்பர்கள் 8 பேரும் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து தப்பிச் சென்ற பெண் ஆந்திராவில் இருந்து ஒடிசாவிற்கு சென்றுள்ளார். அந்தப் பெண் காணாமல் போனதை தொடர்ந்து அவரது பெற்றோர்கள் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில் இந்த கற்பழிப்பு சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது .

இதனைத் தொடர்ந்து ஒடிசா மாநிலத்திற்கு சென்று அந்தப் பெண்ணை மீட்டு வந்த காவல்துறையினர் இது தொடர்பான குற்றவாளிகள் 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மைனர் பெண் 11 நபர்களால் கற்பழிப்பு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்..!! அரசு அதிகாரிகள் உள்பட 900 பேர் குற்றவாளிகளாக சேர்ப்பு..!!

Wed Jan 3 , 2024
செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. அதாவது அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கை நடத்துவதற்கான அனுமதி தமிழ்நாடு அரசிடம் […]

You May Like