fbpx

பணக்கார சபலவாதிகளை மட்டும் குறி வைத்து, நெருக்கமாக இருந்த போது வீடியோ எடுத்து மிரட்டிய பிரபல மாடல் அழகி அதிரடி கைது….!

பெங்களூர் அருகே பணக்கார சபல வாதிகளை மட்டும் குறி வைத்து, டெலிகிராம் செயலியின் மூலமாக நட்பாக பழகி அவர்களை தன்னுடைய காதல் வளையில் வீழ்த்தி பின்பு, அவர்களை மிரட்டி பணம் பறித்த பிரபல மாடல் அழகியை தற்போது காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெரும் பணக்காரர் புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரில் டெலிகிராம் செயலியில் ஒரு மாடல் அழகி தன்னுடன் லைவ் சேட்டிங் செய்திருந்தார் என்றும், அவருடன் அடிக்கடி நானும் சேட்டிங் செய்து வந்தேன் என்றும் குறிப்பிட்டார். அதுபோது இருவரும் ஆபாசமாகவும் சேட்டிங் செய்து கொண்டதாக அவர் தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதோடு வீடியோ கால் மூலமாகவும் நாங்கள் உரையாடிக்கொண்டோம். இந்த நிலையில் தான், நான். அவரை சந்திப்பதற்காக சென்றேன். அப்போது, அவருடன் நெருக்கமாக இருந்த போது, அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அந்த வீடியோவை என்னிடம் காட்டி, பல லட்சத்தை பறித்துக் கொண்டார். என்று இந்த பணக்காரர் வழங்கிய புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இளைஞர் வழங்கிய மாடல் அழகியின் செல்போன் எண்ணை கொண்டு, தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், ஹனி டிராப் என்ற கும்பலை சேர்ந்த சரவணபிரகாஷ், அப்துல் காதர், யாசின் உள்ளிட்ட மூன்று பேரையும் முதலில், காவல்துறையினர் கைது செய்தனர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடி சம்பவங்களுக்கு உறுதுணையாக செயல்பட்டது மாடல் அழகி நேகா மேகர் என்று தெரியவந்தது.

இந்த நிலையில் தான், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தலைமுறைவாக இருந்த நேகாவை காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

அதாவது, சமூக வலைத்தளங்களில், எப்போதும் ஆக்டிவாக இருக்கும், பெரும் பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களை அவர் குறி வைத்திருக்கிறார். டெலிகிராம் செயலியின் மூலமாக அவர்களை தொடர்பு கொண்டு, சபல புத்தியுடன் இருந்த நபர்களுக்கு, நேகா சொக்குப்பொடி போட்டு மயக்கியதாக சொல்லப்படுகிறது.

பின்பு அவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, அவர்களுடன் படுக்கை அறையில் ஒன்றாக தனிமையில் இருக்கும் போது, அதை, யாசின், அப்துல் காதர் சரவணப்பிரகாஷ் மூவரும் வீடியோவாக எடுத்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

பின்னர் அந்த வீடியோவை வைத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக, அந்த கும்பல் பல தொழிலதிபர்களையும், பெரும் பணக்காரர்களையும் மிரட்டி இருக்கிறது. ஒரு சிலருக்கு தங்களுடைய மானம், மரியாதை கெட்டுவிடும் என்ற பயம் இருந்ததால், இவர்களுக்கு பணம் கொடுத்து சரி செய்துள்ளனர். இன்னும் சிலர் இதனை கிராபிக்ஸ் படம் என்று தெரிவித்து, பணம் கொடுக்க மறுத்தால், அவர்கள் மேகாவின் வீட்டிற்கு செல்லும் வீடியோவை அனுப்பி மிரட்டி வந்ததும், தெரிய வந்தது.

பொதுவாக, இந்த கும்பரிடம் சிக்கிய அனைவரும் 20 முதல் 50 வயது வரையிலான பணக்காரர்கள் என்று கூறப்படுகிறது. நேகாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை காட்டி பணத்தை கேட்டு மிரட்டல் விடுப்பதோடு, அந்த ஆண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று சொல்லி, அத்துடன், தன்னை திருமணம் செய்து கொண்டு சுன்னத் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டுவார் என கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றால், குறிப்பிட்டு தொகையை அந்த நபர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்.

Next Post

இந்திய ராணுவ பாதுகாப்பு மேலாண்மை கல்லூரியில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு….! +2 முடித்திருந்தால் போதும், சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

Mon Aug 21 , 2023
நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் வேலை வாய்ப்பு செய்திகள் பல வெளியிடப்படுகிறது. அதை பார்த்து, நம்முடைய செய்தி நிறுவனத்தை பின் தொடர்ந்து வருபவர்கள், இதன் மூலமாக பயன் பெற்று, வேலை வாய்ப்பை மிக விரைவில் பெறலாம். ஆகவே நம்முடைய செய்தி நிறுவனத்தைப் பின்தொடர்ந்து, உங்களுக்கான வேலை வாய்ப்பை மிக விரைவில் பெறுங்கள். இந்திய ராணுவ பாதுகாப்பு மேலாண்மை கல்லூரியில் இருந்து, தற்போது ஒரு புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி […]

You May Like