குரங்கம்மை தொற்று உலகமே எதிர்பார்க்காத வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
75 நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வரும் சூழலில், இதுவரை குரங்கம்மை நோய் பரவாத நாடுகளிலும் பரவ தொடங்கிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பையும் தாண்டி குரங்கம்மை தொற்று அதிவேகத்தில் பரவிவருவது உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியா உடனடியாக குரங்கம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
குரங்கம்மை வைரஸ் பரிணாமத்தை கண்டறிய கூடுதலான ஆய்வுகள் தேவை என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. குரங்கம்மை நோய் உடலுறவு உட்பட எவ்வித நெருக்கமான தொடர்புகள் வழியாக பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளார். துணிகள், படுக்கைகள், உடைகள் மூலமாக பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.