fbpx

“பாளாய் போன சண்டை.”! பலியான 4 வயது பெண் குழந்தை.! 2 உயிர் ஊசல்.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்பத்த தகராறு காரணமாக எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் 4 வயது சிறுமி பலியான நிலையில் தாய் மற்றும் அவரது சகோதரி தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். விவசாயியான இவருக்கு திருமணமாகி விஜயா(27) என்ற மனைவியும் அனுஸ்ரீ(7) மற்றும் அகஸ்டி(4) என்ற 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில் சந்திர மோகன் மற்றும் விஜயா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

சம்பவம் நடந்த தினத்தன்று சந்திரமோகன் மற்றும் விஜயா இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடும் சண்டையாக மாறி இருக்கிறது. இதனால் மனமுடைந்த விஜயா தின்னர் கெமிக்கலில் எலி பேஸ்டை கலந்து தனது மகள்களையும் குடிக்க வைத்து தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து 3 பேரும் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் 4 வயது குழந்தை அகஸ்டியின் நிலமை மோசமானதால் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குடும்ப தகராறில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

’என்னய்யா காசு காசு’..!! ’செத்தா கூட அர்ணா கொடியை அத்துட்டுதான் புதைக்குறான்’..!! வைரலாகும் விஜயகாந்தின் வீடியோ..!!

Thu Dec 28 , 2023
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவர் பணம் பற்றி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. அதில் என்னய்யா காசு காசு மக்கள் கொடுத்தது அது […]

You May Like