மத்தியபிரதேசத்தில் எம்.பி. ஒருவர் தனது கைகளால் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது.
மத்திய பிரதேச மாநிலம் ரேவா தொகுதி பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா. சமீபத்தில் இவர் அரசுப் பள்ளிக்கு மரம் நடும் விழாவிற்கு சென்றார். அப்போது பள்ளியில் உள்ள கழிவறையை சோதனை செய்தார். அசுத்தமாக இருந்த கழிவறையை தன் வெறும் கைகளால் அவர் சுத்தம் செய்தார். இந்த காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
கழிவறையை சுத்தம் செய்ய பிரஷ் போன்றவற்றை பயன்படுத்தித்தான் சுத்தம் செய்ய வேண்டும். இவர் எதற்காக இவ்வாறு செய்கின்றார். குறைந்த பட்ச அடிப்படை அறிவு கூடவா இல்லை என்பது போல கமென்டுகள் வந்த வண்ணம் உள்ளது.
இது போன்ற வீடியோக்களை எடுக்கவே கேமராவுடன் கழிவறைக்கு சென்றிருப்பார் போல என ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் இது போட்டோ ஷுட்டாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இது போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்து நம்மை முட்டாளாக்கி விடுவார்கள்.. என்பதுபோன்ற கமென்ட்டுகளையும் இந்த பதிவு பெற்றுள்ளது.
சமீப காலமாக ஸ்வச் பாரத் என்ற கொள்கையை பா.ஜ.கவினர் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். 2014ல் இந்த கொள்கை பா.ஜ.க.வால் தொடங்கப்பட்டது. பின்னர் காணாமல் போனது. பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இதை நடைமுறைப்படுத்துவதற்ககாக கூட இவ்வாறு செய்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.