fbpx

இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற்றாலும் கணவரிடமிருந்து வாழ்நாள் முழுதும் ஜீவனாம்சம் பெறலாம்: அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி…!

இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற்றாலும், மறுமணம் செய்யும் வரை அவர்களுக்கு முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஜாஹிதா கட்டூன் என்ற இஸ்லாமிய பெண் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு விவாகரத்து செய்யப்பட்ட கணவனிடமிருந்து ‘இத்தா’ காலம் முடியும் வரை மட்டுமல்ல, அவருடைய வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளது. இஸ்லாமிய சட்டத்தின் படி, விவாகரத்து பெற்ற பெண் மறுமணம் செய்து கொள்ள இதாத் காலம் எனப்படும் மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

இந்த நிலையில், விவாகரத்துக்கு முன்பு எப்படி அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட்டதோ அதே முறையில் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் காஜிபூர் குடும்பநல நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி, ‘இத்தா’ காலம் வரை மட்டுமே ஜீவனாம்சம் வழங்க வேண்டும், என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் அந்த உத்தரவு சட்டவிரோதமானது. சட்ட விதிகள் மற்றும் ஆதாரங்களை சரியாக ஆராயாமல் காஜிபூர் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதாக கூறி வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Kokila

Next Post

2023ல் அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர்கள் : சுவாரசிய தகவல்கள்...!

Sat Jan 7 , 2023
கிறிஸ்டியானோ ரொனால்டோ :  கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் அல் நாஸருடன் ஜூன் 2025 வரை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். போர்ச்சுகல் நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவை  சவுதி அரேபிய தரப்புடன் இணைக்கும் மிகப்பெரிய ஒப்பந்தம் சுமார் $211 மில்லியன் டாலர்கள் ஆகும். கிலியன் எம்பாப்பே : ஜனவரி 2022 இல் ரியல் மாட்ரிட்டை வென்ற பிறகு, பிரெஞ்சு ஜாம்பவான்களுடன் Mbappe $128 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனால் ரொனால்டோ சவுதி […]

You May Like