fbpx

கோடை சீசனில் முலாம்பழம் அவசியம் சாப்பிடவேண்டும்!… ஏன் தெரியுமா?

முலாம் பழத்தை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தூக்கக் கோளாறுகள் கூட நீங்கும், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம். இன்னும் பல நன்மைகள் உள்ளன.

முலாம் பழத்தில் (Muskmelon) ஏராளமான சத்துக்கள் உள்ளன. நீரில் கரையும் வைட்டமின் சி இதில் உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இந்த பழத்தில் கண் பார்வை, சருமத்திற்கு ஏற்ற வைட்டமின் ஏ இருக்கிறது. முலாம் பழத்தில் உள்ள கேலிக் அமிலம், எலாஜிக் அமிலம், காஃபிக் அமிலம் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை சிதைவிலிருந்து பாதுகாக்கிறது. கோடைகாலத்தில் இந்த பழத்தை உண்பதால் உடல் நீரேற்றமாக இருக்கும். உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். இரத்த நாளங்களை தளர்த்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை உண்பதால் கிடைக்கும் மற்ற நன்மைகளை இங்கு காணலாம்.

முலாம் பழத்தில் கலோரிகள், கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. அதனால்தான் இந்த பழம் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பழம் வயிற்றின் வழியாக உங்கள் செரிமான அமைப்புக்குள் செல்ல சிறிது நேரம் ஆகும். இதனால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும். பசி எடுக்காது. முலாம் பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது கண் தசைகளை பாதுகாத்து கண் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. முலாம் பழத்தில் கரோட்டின் உள்ளது. இது கண்புரை வராமல் தடுக்க உதவுகிறது. இந்த பழம் பார்வையை மேம்படுத்துகிறது.

முலாம்பழம் மன அழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நன்றாக தூங்க உதவுகிறது. பொட்டாசியம் என்ற தாது ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவும். முலாம் பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். ஆகவே இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். இந்தப் பழத்தில் அடினோசின் என்ற கலவையும் உள்ளது. இது இதயத்திற்கு நன்மை பயக்கும். இந்த பழம் இதய அமைப்பில் இரத்தம் உறைவதைத் தடுக்கிறது.வைட்டமின் சி நிறைந்துள்ள முலாம் பழம் மாதவிடாய் வலியைக் குறைக்கிறது. இரத்தம் உறைதல் மற்றும் தசை பிடிப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. ரத்தப்போக்கு சீராக இருக்க உதவுகிறது. மாதவிடாய் தொடங்கிய முதல் இரண்டு நாட்களுக்கு இந்தப் பழத்தை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Kokila

Next Post

சூப்பர் நியூஸ்...! சுயதொழில்‌ தொடங்க ரூ.10 லட்சம் மானியம்...! நீங்களும் பெறலாம்...! முழு விவரம் இதோ...

Thu Apr 6 , 2023
சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ மத்திய மாநில அரசு வழங்கும் மானிய தொகையை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். தமிழக அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்‌ ஆகும்‌. தொழில்‌ தொடங்கவும்‌ மேம்படுத்தவுமான தொழில்‌ நுட்ப […]
விவசாயிகளே 13-வது தவணை பணத்திற்காக வெயிட்டிங்கா..? இதை செய்தால் தான் பணம் வரும்..!!

You May Like