திருச்சி மாவட்டம் பட்டவார்டு ரோடு ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் 28 வயது பெண். இவர், தனியார் கார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பால்பண்ணை விஸ்வாஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ பொன்னையன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
அப்போது, பொன்னையன் அந்த இளம் பெண்ணிடம் பல ஆசைவார்த்தைகளை கூறி வெளியே அழைத்துச் சென்று பலமுறை உடலுறவு வைத்துள்ளார். இதனால், ஒருகட்டத்தில் இளம்பெண் கர்ப்பமாகியுள்ளார். ஆனால், கர்ப்பமாக இருக்கும் போது திருமணம் செய்தால் அனைவரும் தவறாக பேசுவார்கள் என்பதால், கர்ப்பத்தை கலைத்துவிடுமாறு காதலன் கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்த பெண்ணும் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
அதன் பிறகும் பொன்னையன் திருமணத்திற்கு சம்மதிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், மன வேதனை அடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போதும், திருமணம் செய்துக் கொள்ள சம்மதிக்கவில்லை. அதன் பிறகு, காதலனை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதால், அவருடனான உறவை பொன்னையன் முறித்துக் கொண்டார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து புகார் அளித்திருக்கிறார். அந்த புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து, பொன்னையன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : இந்த ஜாதகக்காரர்களுக்கு திருமணத்தை தாண்டிய கள்ள உறவு இருக்குமாம்..!! பெண்களே இந்த பரிகாரத்தை பண்ணுங்க..!!