fbpx

”என் தாய், மகள்களை கூட விட்டு வைக்கல”..!! ”20 வருஷமா பலாத்காரம்”..!! கண்ணீர் மல்க பெண் பரபரப்பு புகார்.!!

என் தாயாரையும் விட்டு வைக்கவில்லை. தொடர்ந்து, பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். பின்னர் அவர் என்னுடைய மகள்களையும் விட்டு வைக்கவில்லை. வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்து 20 வருடங்களாக பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி வருகிறார் என்று பிரேசிலில் தனது மகள்களுடன் கண்ணீர் மல்க புகார் தெரிவித்திருக்கிறார் பெண் ஒருவர்.

பிரேசிலின் Novo Oriente நகரில் 54 வயது நபர் ஒருவர் தனது மனைவி, 7 குழந்தைகள் மற்றும் மாமியாரை 20 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போலீசரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமானதில் இருந்து அந்த நபர் தனது மனைவியை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மனைவியை வெளியே அழைத்துச் சென்று வருவார். அக்கம் பக்கத்தினர் யாருக்கும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி தெரியாது.

வீட்டுக் காவலில் இருந்து தப்பிய மனைவி மற்றும் மகள்கள் போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த புகாரில், எங்களுக்கு திருமணமாகி 3 முதல் 22 வயதுக்குள் 7 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் குளித்து, ஆடை அணிவதை பார்த்து ரசிப்பதற்காக என் கணவர் வீட்டின் சுவர்களில் ஓட்டை போட்டுள்ளார். அவர் 20 வருடங்களாக எனது 3 வயது மகள் உட்பட எனது தாயையும் பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார்.

இதற்கு முன், வீட்டுக்காவலில் இருந்த எனது தாயும் அந்த நபரால் சித்ரவதை செய்யப்பட்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். என் கணவருக்கு என் மகள் தான் தூக்க மாத்திரைகள் கொடுத்து மயக்கமடைய செய்த பின், நாங்கள் அவரிடம் இருந்து தப்பித்து வந்து இந்த புகாரைத் தெரிவிக்கிறோம் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அந்த நபர் தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read More : தீயாய் பரவும் தொண்டை அடைப்பான் நோய்..!! மருந்து பற்றாக்குறை..!! 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாப மரணம்..!!

English Summary

My mother was not left behind either. He continued to rape her. Then he did not leave my daughters.

Chella

Next Post

10 ரூபாய் நோட்டு இனி புழக்கத்தில் இருக்காதா..? ரிசர்வ் வங்கியில் என்ன நடக்கிறது..?

Mon Oct 14 , 2024
Due to increase in digital transactions, shortage of retailers has reduced the circulation of Rs.10 notes. In this case, now the major update about 10 rupees has been released.

You May Like