fbpx

ரப்பர் படகு மூலம் கடல்வழியே தமிழ்நாட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்..! பின்னணி என்ன?

ரப்பர் படகு மூலம் கடல் வழியாக தமிழகத்திற்கு நுழைந்த மர்ம நபரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் அருகே முனைக்காடு பகுதியில் நேற்று காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கி நின்று கொண்டிருந்தது. இதையடுத்து, தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார், விரைந்து சென்று படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கரை ஒதுங்கிய படகு 13 அடி நீளமும், 3 அடி அகலம் கொண்டதாகும். இதில், இலங்கையில் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டில்கள், படகு துடுப்புகள், லைப் ஜாக்கெட், டிராவல் பேக், ஒரு ஜோடி காலணிகள் ஆகியவை இந்த படகில் இருந்து கைப்பற்றப்பட்டது.

.. போலிஸ் தீவிர விசாரணை - பின்னணி என்ன?

மேலும், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், கப்பற்படை அதிகாரிகள், கடற்கரையில் ஒதுங்கியுள்ள படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாகையிலிருந்து மோப்ப நாய் துளிப் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு படகை மோப்பம் பிடித்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் நுழைந்து ஓடியது. இந்நிலையில், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் பதுங்கியிருந்த போலந்து நாட்டுக்காரர் ஒருவரை போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த அவரிடம், இவர் யார்? எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்தும், இவருடன் எத்தனை நபர்கள் வந்துள்ளனர் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி..! அடுத்தடுத்து புதிய உத்தரவுகளை பிறப்பிக்கும் பள்ளிக்கல்வித்துறை..!

Mon Jul 25 , 2022
கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக தனியார் பள்ளிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் 17ஆம் தேதி வன்முறையாக மாறியது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 2 முறை மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் […]

You May Like