fbpx

நளினி வழக்கறிஞர்கள்  லட்சக்கணக்கில் பணம் வாங்குவார்கள்… எங்கிருந்து பணம் வருகின்றது.. அனுசுயா ஆவேசம்!!

நளினியின் வழக்கறிஞர்கள் அனைவருமே லட்சக்கணக்கில் பணம் வாங்குபவர்கள் அவர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு எங்கிருந்து பணம் வருகின்றது என்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாட்சியமாக இருந்த காவல்துறை பெண் அதிகாரி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 7 பேர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்கள். இதையடுத்து நளினி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் சாட்சியாக இருந்த போலீஸ் அதிகாரி அனுசுயா என்பவர் பற்றியும் தெரிவித்தார். அவர் தன்னை பார்க்கவே இல்லை, தவறாக அடையாளம் காட்டிவிட்டார் என தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக காவல்துறை பெண் அதிகாரி அனுசுயா, ’’நான் கூறுவது பொய் என்று கூறும் நளினிதான் பொய்யாக அடுக்கி வருகின்றார். அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

இது தொடர்பாக தனியார் யூடியூப் ஒன்றிற்கும் அவர் பேட்டி அளித்திருந்தார். ’’நான் சரியாகத்தான் அடையாளம் காட்டினேன் நளினி சம்பவ இடத்திற்கு வரும்போது மைசூர் பட்டு சேலையில் பளபளவென வந்தார்கள். விஐபி போல இருந்தார்கள். நேராக அவர்கள் சென்றதும் மக்கள் அமரும் இடத்திற்கு சென்று அமருமாறு கேட்டுக்கொண்டேன். பளபளக்கு சேலையில் மண் மரையில் அமர்வதற்கா இப்படி வந்தார்கள் என நான் பார்த்தேன். நளினியும், சுபாவும் மட்டும் ஓடும் நிலையில் உட்கார்ந்திருந்தனர்.’’ என்றார்.

இத்தனை ஆண்டுகள் கழித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாட்சியங்கள் விசாரித்து பின்னர் 7 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த விடுதலைக்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காவல்துறை பெண் அதிகாரி ஒருவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். மேலும் அவர் கூறுகையில், ’’ கொலையாளிகள் மற்ற நாடுகளில் தூக்குத்தண்டனை உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றது. இந்தியாவில் மட்டும் சாப்பாடு போட்டு அவர்களுக்கு நல்வாழ்வு கொடுத்து விடுவிக்கின்றது’’ என்றார்.

’’அது கூட பரவாயில்லை பல லட்சம் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாட நளினிக்கு எப்படி? எங்கிருந்து? பணம் வருகின்றது. அவள் மகள் லண்டனில் மருத்துவம் படித்துவிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார். எப்படி அவ்வளவு பணம் வந்தது. 36 ஆண்டுகளாக போராட ராஜிவ் கொலை செய்தவர்களுக்கு உதவி செய்தது யார்? நளினியை குற்றவாளி அல்ல எனக்கொரு உச்சநீதிமன்றம் விடுதலை செய்யவில்லை கருணை அடிப்படையில்தான் செய்துள்ளது. என தெரிவித்துள்ளார்.

Next Post

கோளாறான ’அசல் கோளாறு’… பட்டும் திருந்தவில்லை!!

Wed Nov 16 , 2022
பிக்பாஸ் சீசன் 6-ல் அடிபட்டு வெளியே வந்த அசல்கோளாறு சங்கரை தாக்கும் விதமாக பாடல் இயற்றியுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. தமிழ் சினிமாவில் கலக்கல் காமெடிகளை வழங்கி மக்கள் மத்தியில் வைகைப்புயல் வடிவேலு என்று பெயர் பெற்று இன்றளவும் புகழப்பட்டு வருபவர் ’’வடிவேலு’’. ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளளார். இம்சை அரசன் 23ம் புலிகேசி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுகவுக்கு எதிராக திமுக சார்பில் […]

You May Like