தமிழ் திரையுலகில் கடந்த 90-களில் பிரபலமான ஹீரோவாக இருந்தவர் நெப்போலியன். மத்திய அமைச்சராக பதவி வகித்த நிலையில், அவரது மகனுக்கு தசை சிதைவு நோய் வந்ததால் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில், மகன் தனுஷ் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் நெப்போலியன், சமீபத்தில் அவருக்கு திருமணம் செய்ய நெல்லையில் பெண் பார்த்ததாகவும், திருமண நிச்சயதார்த்தமும் ஆன்லைன் மூலம் நடந்தது என்றும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், நெப்போலியன் சமூகத்தின் வழக்கப்படி திருமணம், மணமகள் வீட்டில் தான் நடக்க வேண்டும் என்பதற்காக மகன் தனுஷை நெல்லைக்கு அழைத்து வருவதற்கு நெப்போலியன் ஏற்பாடு செய்துள்ளாராம். நெப்போலியன் மகனால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்பதால் அவர் இந்தியா வருவதற்காக சிறப்பு சொகுசு கப்பலை புக் செய்திருப்பதாகவும், அது மட்டுமே கோடிக்கணக்கில் செலவானதாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் திருமண தேதி முடிவு செய்யப்பட்டு நெல்லையில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More : ”ரேஷன் கடைகளில் இனி பாமாயில் கிடையாது”..!! ”மாற்று பொருள் இதுதான்”..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!