திருவனந்தபுரத்தில் 80 வயது மூதாட்டியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருவனந்தபுரம் பகுதியை அடுத்துள்ள வழியை துறை பகுதியில் உள்ளவர் வீட்டில் மூதாட்டி ஒருவர் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர் குடிக்க தண்ணீர் வேண்டுமென அந்த மூதாட்டியிடம் கேட்டிருக்கிறார். இதனால் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுக்க மூதாட்டி சென்றுள்ளார். அப்போது மூதாட்டியை பின் தொடர்ந்து சென்ற அந்த வாலிபர் அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அந்த மூதாட்டி அதிர்ச்சியில் அலற அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்திருக்கின்றனர். இதனால் சுதாகரித்துக் கொண்ட அந்த வாலிபர் அப்பகுதியில் இருந்து தப்பி சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து வலியத் துறை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள் இது தொடர்பாக தப்பிச் சென்ற வாலிபரை தீவிரமாக தேடி வந்தனர். காவல்துறையின் தீவிரமான தேடுதல் வேட்டையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். மேலும் காவல்துறையின் விசாரணையில் அந்த நபரின் பெயர் ரஞ்சித் என்பதும் 42 வயதான அவர் மீது ஏற்கனவே பலாத்காரம் தஞ்சாவூர் பணி மற்றும் அடிதடி போன்ற வழக்குகள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை சிறையில் அடைத்தனர்.