இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் (Anant Ambani ), தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் (Radhika Merchant ) ஜனவரி 2023இல் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பே இவர்களது திருமண கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது.
சமீபத்தில், குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் இருக்கும் அம்பானி பண்ணை வீட்டில் ‘லகன் லக்வான்’ என்ற விழா நடைபெற்று முடிந்தது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களை மணப்பெண் ராதிகா மெர்ச்சன்ட் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். இவர்களது விரிவான திருமண கொண்டாட்டங்கள் மார்ச் 1ஆம் தேதி முதல் விரிவாக தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. முகேஷ் அம்பானியும், நிதா அம்பானியும் (Nita Ambani) தங்களது மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் (Akash Ambani) மனைவியும், தங்கள் முதல் மருமகளுமான ஷ்லோகா மேத்தாவுக்கு (Shloka Mehta) ரூ.451 கோடி மதிப்புள்ள Mouawad L’Incomparable என்ற உலகின் விலையுயர்ந்த நெக்லஸை பரிசு அளித்திருந்தனர்.
இந்நிலையில் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் மனைவியும், நிதா அம்பானியின் நெருங்கிய வருங்கால மருமகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு இந்தியாவின் பணக்கார தம்பதிகள் வழங்கிய பரிசு குறித்த ஆர்வம் மக்களை சீண்டியுள்ளது. ராதிகாவை தங்கள் குடும்பத்திற்கு வரவேற்கும் விதமாக இரண்டு வெள்ளி துளசி பானைகள், ஒரு வெள்ளி தூபக் குச்சி மற்றும் ஒரு லட்சுமி-கணேஷ் சிலை ஆகியவற்றை உள்ளடக்கிய வெள்ளி பரிசு பெட்டகத்துடன் நிதா அம்பானி வரவேற்றிருந்தார். அத்துடன் நிச்சியதார்த்ததின் அன்று ஆனந்த அம்பானி-ராதிகா மெரச்சன்ட் ஜோடிக்கு சுமார் 4.5 கோடி மதிப்பிலான Bentley Continental GTC சொகுசு காரை பரிசாக அம்பானி தம்பதி வழங்கியது.
மேலும், நிதா அம்பானி தன்னுடைய பல கோடி மதிப்பிலான அழகான முத்து மற்றும் வைர ஆபரண நகையை வருங்கால மருமகள் ராதிகா மெரச்சன்ட்டுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த நெக்லஸை சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது நிதா அம்பானி அணிந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Read More : அதிர்ச்சி..!! ஜூன் 4ஆம் தேதி முதல் GPay சேவை நிறுத்தம்..!! கூகுள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!!