fbpx

நீட் 2022 : மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற சொன்ன புகார்.. 5 பெண்கள் கைது…

நீட் தேர்வெழுதுவதற்கு முன்பு உள்ளாடைகளை களைய சொன்னதாக எழுந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான இளநிலை நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது. சுமார் 18 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். அந்தவகையில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு வந்த மாணவிகளின் உள்ளாடையை களைய சொல்லி சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீட் தேர்வு எழுதிய மாணவியின் தந்தை ஒருவர் கொட்டாரக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.. அந்த புகாரில் மாணவர்கள் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) ஆடை கட்டுப்பாடு உள்ளாடைகளை அகற்றுவதை பரிந்துரைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்…

குறைந்தபட்சம் 90 சதவீத மாணவர்கள் பரீட்சைக்கு முன் தங்கள் உள்ளாடைகளை கழற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அவற்றை ஒரு ஸ்டோர் ரூமில் கொட்டும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் மாணவியின் தந்தை தனது புகாரில் கூறியிருந்தார்.. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண்களில் மூவர் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) பணியமர்த்தப்பட்ட ஏஜென்சியில் பணிபுரிந்தனர், இருவர் சம்பவம் நடந்த கொல்லத்தில் உள்ள ஆயூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது..

இந்த குற்றச்சாட்டை கவனத்தில் கொண்டு, கேரளாவில் உள்ள NEET (UG)-2022 மையங்களில் ஒன்றில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவம் பல்வேறு ஊடக அறிக்கைகள் மூலம் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் (MoE) தெரிவித்துள்ளது. அதன்படி, உண்மைகளை விரிவாகக் கண்டறிய NTA ஆல் உண்மையைக் கண்டறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தேசிய தேர்வு முகமை இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.. நீட் தேர்வின் போது அல்லது தேர்வு முடிந்த உடன் உள்ளாடை களைய சொன்னது தொடர்பாக தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும், இது தொடர்பாக எந்த மின்னஞ்சலும் / புகாரும் பெறவில்லை என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற விஞ்ஞானி மாரடைப்பால் காலமானார்..

Wed Jul 20 , 2022
புகழ்பெற்ற விஞ்ஞானியும், இன்ஸ்டிடியூட் ஆப் லைஃப் சயின்சஸ் (ஐஎல்எஸ்) இயக்குநருமான டாக்டர் அஜய் பரிதா நேற்று கவுகாத்தியில் காலமானார்.. பத்மஸ்ரீ விருது பெற்ற பரிதாவுக்கு 58 வயது. அசாம் மாநிலத் தலைநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார். அவர் கவுகாத்தியில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள இருந்தார். அஜய் பரிதாவின் அகால மறைவுக்கு ஒடிசா ஆளுநர் பேராசிரியர் கணேஷி லால், ஆந்திரப் பிரதேச ஆளுநர் […]

You May Like