குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பை சந்தித்தன. தற்போது வரை மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 27ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.