Nepal Floods: நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளது, 29 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நேபாளத்தில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் பலத்த வெள்ளம் மற்றும் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து நேபாள உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி நாடு முழுவதும் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 209ஆக உயர்ந்துள்ளதாகவும் மேலும் 29 பேரைக் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
“நோய்வாய்ப்பட்ட அல்லது இன்னும் பாதுகாப்பிற்கு கொண்டு வரப்பட வேண்டியவர்களுக்காக நாங்கள் வான்வழி மீட்புகளை தீவிரப்படுத்தினோம்” என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரிஷி ராம் திவாரி கூறினார். பெரும்பாலான இறப்புகள் காத்மாண்டுவில் நடந்தன, அங்கு நகரின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கின. காத்மாண்டுவில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் தடுக்கப்பட்ட நெடுஞ்சாலைக்கு அருகில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பல வாகனங்கள் புதைந்து, அப்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று டஜன் பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவு காரணமாக காத்மாண்டுவிற்கு வெளியே உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளும் தடை செய்யப்பட்டன.
வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்களையும், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியையும் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐநா பொதுச் சபையில் இருந்து திரும்பிய பிரதமர் கட்கா பிரசாத் ஒலி, நெருக்கடிக்கு தீர்வு காண அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
Readmore: ரூ.10 போதும்.. 2GB டேட்டா.. வரம்பற்ற அழைப்புகள்.. 100 SMS..!! ஜியோவின் அசத்தலான ரீச்சார்ஜ் திட்டம்