fbpx

தமிழகத்தை தாக்கும் புதிய ஆபத்து..!! மத்திய அரசு கொடுத்த ஷாக்கிங் நியூஸ்..!!

இந்திய கடற்கரை பகுதிகளில் 33% கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 43% கடற்கரை பகுதிகள் அரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

கடல்நீர் மட்டம் உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், 1901 – 1971ஆம் ஆண்டு வரை கடல்நீர் மட்டம் உயர்வு ஆண்டிற்கு சராசரியாக 1.3 மில்லி மீட்டராக இருந்ததாகவும் இது 2006 – 2018 வரை 3.7 மில்லி மீட்டராக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை தாக்கும் புதிய ஆபத்து..!! மத்திய அரசு கொடுத்த ஷாக்கிங் நியூஸ்..!!

இதன் மூலம் கடல்நீர் மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்தியாவில் 6 ஆயிரத்து 632 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலோர பகுதிகள் உள்ள நிலையில், இதில் மூன்றில் ஒரு பகுதி அரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் 991 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடற்கரை உள்ள நிலையில், இதில் 423 கிலோ மீட்டர் அதாவது 42.7% அரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Chella

Next Post

’எங்களை மதிக்கவே இல்லை’..!! கடுப்பான விளையாட்டு வீரர்..!! உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பரபரப்பு..!!

Thu Dec 22 , 2022
ஹாக்கி உலகக்கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் ஒலிம்பியன்களுக்கு அவமரியாதை, மேடையில் இடம் கொடுக்காமல் அருகில் அமரவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஒடிசாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்துவதற்காக சாம்பியன் கோப்பை நாடு முழுவதும் உள்ள 15 முக்கிய நகரங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று, சென்னை வந்த உலகக் கோப்பை எழும்பூர் ராதாகிருஷ்ணன் […]
’எங்களை மதிக்கவே இல்லை’..!! கடுப்பான விளையாட்டு வீரர்..!! உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பரபரப்பு..!!

You May Like