fbpx

புத்தாண்டு கொண்டாட்டம்: இவர்கள் சாலை விதிகளை மீறினால் பெற்றோர் மீது வழக்கு..! சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை!!

வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி இரவு, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது சளி விதிமீறல்களில் ஈடுபட்டதால் நிறைய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதால், புத்தாண்டு இரவு கடும் கண்காணிப்பில் காவல்துறையினர் இருக்க உள்ளனர்,சாலை விதிமீறலை ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை, பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வாகனம் ஓட்டி பிடிக்கப்பட்டால், அவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.

மேலும், புத்தாண்டு அன்று கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுடன் டிச.29-ல் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறை உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்படும் என்று கூறினார்.

Kathir

Next Post

சூப்பர் நியூஸ்...!தொழில் தொடங்க போறீங்களா...? அரசு வழங்கும் 35% மானியம் எப்படி பெறுவது...? முழு விவரம்...

Wed Dec 28 , 2022
பிரதம மந்திரியின்‌ வேலை வாய்ப்பு உருவாக்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ கூட்டுறவு வங்கிகள்‌ மூலமாக நிதி உதவியினை பெற்று புதியதாக தொழில்‌ தொடங்க ஆர்வம்‌ மிக்க தொழில்‌ முனைவோர்கள் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம். இத்திட்டம்‌ காதி மற்றும்‌ கிராம தொழில்‌ வாரியம்‌, மாநில காதி மற்றும்‌ கிராமத்‌ தொழில்கள்‌ ஆணையம்‌ மற்றும்‌ மாவட்ட தொழில்‌ மையம்‌ மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்‌ இந்த நிதிஆண்டு முதல்‌ […]

You May Like