fbpx

அசாமில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் பூஜ்யம்; பல பள்ளிகளை மூட கல்வித் துறை முடிவு..!

அசாமில் பல அரசு பள்ளி கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அசாம் கல்வி துறை வெளியிட்டுள்ள செய்தியில், 34 அரசு பள்ளிகளில் படித்து வந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த வருடம் 10-ஆம் வகுப்பு வாரிய தேர்வில் கலந்து கொண்டனர். ஆனால், ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அசாம், கல்வி மந்திரியான ரனோஜ் பெகு கூறும்போது, பூஜ்ய தேர்ச்சி விகிதம் பெரும் இந்த பள்ளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை செலவிடுவது என்பது அர்த்தமற்றது என கூறியுள்ளார். இதுதவிர, மிக குறைவான எண்ணிக்கைகளை கொண்ட மாணவர்கள் இருக்கும் பல பள்ளிகள் உள்ளன. மாணவர்களே இல்லையெனில் பள்ளிகள் எப்படி இயங்கும். ஒரு சில பள்ளி கூடங்களில் இரண்டு முதல் மூன்று மாணவர்களே உள்ளனர்.

பள்ளி கூடங்களின் முதன்மை பணியே, கல்வியில் சிறப்பாக செயல்படுவது ஆகும். ஆனால், ஒரு பள்ளியின் வாரிய தேர்வில் தேர்ச்சி முடிவு பூஜ்யம் என்றால், இந்நிலையில் அந்த பள்ளி இல்லாமல் இருப்பதே நல்லது என்று அவர் கூறியுள்ளார். எனவே, அந்த பள்ளிகளை பிற பள்ளிகளுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Baskar

Next Post

அண்ணன் தங்கை பிரச்சினை; தந்தை மகனை கடப்பாரையால் குத்தி கொன்ற சோகம்..!

Thu Aug 25 , 2022
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகில் இருக்கும் எலியத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மயில் (50). இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய முதல் மனைவி சந்திரா. இவர்களுக்கு சசிக்குமார் (27) என்ற மகன் இருக்கிறார். 25 வருடங்களுக்கு முன்பு சந்திரா இறந்து விட்டதால், வசந்தா என்பவரை மயில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவ்யா(23), தீபிகா(15) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் […]

You May Like