பாட்னா பீகார் மாநிலம் சமஸ்திபூரில் 15 வயது சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் இரண்டு பதிவுகளை பதிவிட்டுஉதவி கேட்டாள்ளார். அந்த சிறுமி வெளீயிட்டு உள்ள முதல் வீடியோவில் ஒரு ஆண் தன்னை கற்பழிக்க முயல்வதையும், இரண்டாவது வீடியோவில் அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும் சொல்லியுள்ளார். தனது தாய், தந்தை மற்றும் மாமா தன்னை பணத்திற்காக விற்பதாகவும், பல ஆண்கள் தான்னை பலாத்காரம் செய்வதாகவும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி கூறினார்.
மேலும் கிராமத்தின் தலைவர், காவல் துறை அதிகாரி போன்றவர்களும் தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாக, அந்த சிறுமி குற்றம் சாட்டியுள்ளார். இந்த பலாத்கார சம்பவங்கள் எல்லாம் அந்தச் சிறுமியின் தாய் மற்றும் தந்தைக்குத் தெரிந்தே நடந்துவருகிறது. அதை அவர்கள் அனுமதிக்கின்றனர். மேலும் தினமும் 20 முதல் 25 பேர் என்னை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். என் அம்மா வீட்டில் மது விற்பனை செய்து வருகிறார். காவல் நிலையத்தில் உள்ள போலீஸ்காரர்களும் வீட்டிற்கு வந்து மது அருந்திவிட்டு பலாத்காரம் செய்துள்ளனர். எனவே இதை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை.
எனக்கு வாழவே பிடிக்கவில்லை. வீட்டில் எனக்கு யாரும் உதவ மாட்டார்கள் என்று தெரிந்ததால் தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். வீடியோவை பார்க்கும் நண்பர்கள் தான் எனக்கு உதவ முன்வர வேண்டும். இல்லையென்றால் அவர்கள் என்னைக் நிச்சயம் கொன்றுவிடுவார்கள். காவல் துறை அதிகாரிகள் பலரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாவட்ட எஸ்ஐ மனோஜ் சிங் கூட என்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதன் காரணமாகவே காவல்துறையிடம் போய் புகார் அளிக்க வில்வை. ஒரு கட்டத்திற்குமேல் என்னால் தாங்க முடியவில்லை. இதனால் நான் நேரடியாக கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து தகவல் சொன்னேன். அப்போது காவல்துறையினர் வந்து எங்கள் வீட்டில் சோதனை நடத்தினர். இருப்பினும், அப்போது காவல்துறையினருக்கு பணத்தைக் கொடுத்துச் சரி செய்துவிட்டனர். இதனால் என் மீது கடும் கோபமடைந்த என் அப்பாவே என்னை பலாத்காரம் செய்தார், என்று அந்த சிறுமி கூறி உள்ளார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் சிறுமியின் தாய் மற்றும் தந்தை உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.