ஆந்திர மாநிலத்தில் அடிக்கடி செம்மரங்கள் கடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். இது தொடர்பாக அந்த மாநில காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக ஆந்திர மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படி கடத்தப்படும் செம்மரக்கட்டைகள் மருந்துகள், இசை கருவிகள், மரத்தாலான பொருட்கள் உள்ளிட்டவை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகின்றது.
அதோடு ரேடியம், யுரேனியம் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கும் இந்த செம்மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில்தான் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தியதாக தமிழர்கள் உட்பட 16 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக அந்த மாநில காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் கிடைத்திருக்கிறது.
அந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, ஆந்திர மாநில காவல் துறையினர் நடத்திய சோதனையில் செம்மரக்கட்டைகளை கடத்தியதாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்பு தானே செம்மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டதாகவும் மேலும் 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கைது செய்யப்பட்ட 16 பேரில் 13 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.