தமிழகத்தில் வர வர ரவுடிசம் அதிகரித்து வருகிறது அந்த ரெவலுசத்தை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், மாநில காவல்துறையின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் இது போன்ற ரவுடிசங்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.தமிழகம் முழுவதிலும் எங்கு எந்த கலவரம் நடந்தாலும், அதனை அசால்டாக கையாண்டு தடுத்து நிறுத்தி அந்த கலவரத்தை ஒன்றும் இல்லாமல் செய்வது காவல்துறை.
ஆனாலும் அப்படிப்பட்ட காவல்துறைக்கு பல சமயங்களில் பல இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படி ஒரு சூழ்நிலை தான் சென்னையில் தற்போது காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது.
சென்னை அயனாவரம் திருவள்ளுவர் சாலை மூலமாக நேற்று முன்தினம் மதியம் ஒரு சபை ஊர்வலம் நடந்தது இதில் பங்கேற்றுக் கொண்ட இரண்டு இறந்தவர் நினைவாக சாலையில் சேவல் சண்டை நடத்தினர். இதன் காரணமாக, அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது.
இது தொடர்பாக தகவல் அறிந்த அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீனா காவலர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் சேவல் சண்டை தடுத்து நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர்.
இதன் காரணமாக, காவல்துறையிடம் சேவல் சண்டை நடத்தியவர்கள் தகராறில் ஈடுபட்டதுடன், பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவருடன் அந்த காவலர் திருநாவுக்கரசு உள்ளிட்டோரை உருட்டு கட்டையால் அடித்து விட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக உதவி ஆய்வாளர் மீனா அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதனை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சூழ்நிலையில்தான் காவல்துறையினரை தாக்கி விட்டு தலைமறைவாக இருந்ததாக அயனாவரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த குணசேகரன் (35) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (20) உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர் அதன்பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்திருக்கின்றனர்.மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.