துபாயிலிருந்து கொழும்பு மூலமாக சென்னைக்கு விமானத்தில் வந்த ஒரு பெண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அந்த பெண்மணி ஆட்டோவில் ஏறி கிளம்பினார். அவரை பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள், அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்டில் 8.28 கோடி ரூபாய் மதிப்பிலான 13.28 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொழும்புவில் இருந்து விமானத்தில் சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணியின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் 6.15 கோடி ரூபாய் மதிப்புள்ள 10.06 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், இருவரிடமிருந்தும் 14.43 கோடி மதிப்பிலான 23.34 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களிடம் தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றன.