fbpx

மேட்ரிமோனி மூலமாக இளம்பெண்களிடம் பேசி iphone விற்பனை செய்வதாக கூறி 3 லட்சத்தை அபேஸ் செய்த இளைஞர்….! டெல்லி போலீஸார் அதிரடி நடவடிக்கை…..!

டெல்லி குர்கானில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது இளைஞர் மேட்ரிமோனி மூலமாக இளம் பெண்களிடம் பழகி அவர்களிடம் தன்னை பணக்காரரை போல காட்டிக் கொண்டு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பின்பு அவர்களை ஏமாற்றியுள்ளார்.

இது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் விஷால் தலைநகர் டெல்லியில் எம்பிஏ முடித்தவர் இவர் மேட்ரிமோனி தளத்தில் தன்னை பணக்காரரை போல காட்டிக் கொண்டார். பெண்களிடம் நண்பராக பழகி அவர்களை கவர்ந்து மலிவான நிலையில் ஐ போன் விற்பனை செய்வதாக அவர்களிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றி இருக்கிறார். இப்படி மோசடி செய்து எளிமையாக பணம் சம்பாதிக்க தொடங்கியதும், அந்த பணத்தை வைத்து ஆடம்பர வாழ்க்கையும் வாழ்ந்து வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

இப்படி பல பெண்களை அவர் ஏமாற்றி வந்த நிலையில் அவர் மீது குர்கானை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர் திருமண வரன் தேடுவதற்காக ஒரு மேட்ரிமோனியல் தளத்தில் அந்த பெண்ணின் ப்ரோபைலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். விஷால் ஒரு வருடத்திற்கு 50 முதல் 70 லட்சம் சம்பாதிப்பதாக தெரிவித்ததை பார்த்து அவரிடம் பேசியுள்ளனர்.

சமூக வலைதளங்கள் மூலமாக அந்தப் பெண் விஷாலுடன் பேசி உள்ளார். விஷால் குர்கானில் சில வில்லாக்கள் மற்றும் பண்ணை வீடுகளை காட்டி அவை தனக்கு சொந்தமானவை என்று கூறியுள்ளார். அப்பாவித்தனமாக அவற்றை நம்பிய அந்தப் பெண்ணின் குடும்பத்தார் அவரை சந்தித்து சம்பந்தம் பேச முடிவெடுத்தனர்.

இவ்வாறான நிலையில், விஷால் தான் மலிவான விலையில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விற்பனை செய்வதாக தெரிவித்து அதனை வாங்கிக் கொள்ளுமாறு அந்த பெண்ணை வற்புறுத்தி இருக்கிறார். விஷாலின் வார்த்தைகாரங்களை நம்பி அந்தப் பெண் தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் சேர்த்து iphone வாங்கி தருமாறு கேட்டு 3,05,799 ரூபாய் பணத்தை விஷாலுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

பெரிய அளவிலான பணம் கைக்கு வந்தவுடன் தன்னுடைய வேலையை காட்ட தொடங்கினார் விஷால். அதாவது, ஒரு விபத்தில் சிக்கி தான் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துவிட்டு விஷால் போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்தார். விஷாலை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாததால் அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்டார்.

அதன் பிறகு அந்தப் பெண் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் விசாரணை ஆரம்பித்தனர் மேட்ரிமோனியல் இணையதளத்தில் இவரிடம் ஒரு பெண்ணை பேச வைத்து சோதித்து பார்த்த காவல்துறையினர் அவர் தன்னுடைய வழக்கமான நடைமுறையில் பெண்களை ஏமாற்ற முயற்சி செய்ததை உறுதி செய்து கொண்டனர். ஆகவே அவரை கைது செய்து விசாரணை நடத்தியது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

அதாவது, கடந்த 2021 ஆம் வருடம் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு குர்கானில் ஒரு உணவகத்தை ஆரம்பித்தும் அந்த தொழிலில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டதால் மேட்ரிமோனி தளங்களில் பெண்களை ஏமாற்ற தொடங்கியதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. விஷால் சில நேரங்களில் பெண்களை சந்திக்கும்போது அவர்களை ஏமாற்றுவதற்காக ஒரு நாளைக்கு 2500 ரூபாய் செலவு செய்து சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்ததாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Post

TVS நிறுவனத்தில் ஏராளமான காலியிடங்கள்..! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்...!

Sat Apr 15 , 2023
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Data Control Manager பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 முதல் 14 வருடம் […]

You May Like