fbpx

12 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை….! சிறுவன் உட்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது கோவையில் பரபரப்பு….!

கோவையைச் சேர்ந்த 12 வயது சிறுமியின் தந்தை வீட்டை விட்டு வெளியேறி விட்ட நிலையில், மனநல பாதிப்புக்கு உள்ளான தன்னுடைய தாயுடன் அந்த சிறுமி வசித்து வந்தார். அதோடு அரசு பள்ளியில் அவர் படித்து வருகிறார் இத்தகைய நிலையில், சிறுமி படித்து வரும் அரசு பள்ளியில் சைல்டு லைன் சார்பாக போக்சோ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறுமிகள் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டால் எந்தவித தயக்கமும் இல்லாமல் தனியாக வந்து புகார் வழங்கலாம் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆகவே அந்த சிறுமி அதிகாரியிடம் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கூறினார். அந்த சிறுமையை தெரிவித்ததாவது அந்த சிறுமியின் வீட்டின் அருகில் வசித்து வரும் மதன் (24) என்ற நபர் அவருடைய மனைவி சண்டையிட்டு வெளியே சென்றபோது வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்திருக்கிறார் என்று அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியே சொல்ல கூடாது என்றும் அந்த சிறுமியை அந்த இளைஞர் மிரட்டியுள்ளார். ஒரு 17 வயது சிறுவன் சிறுமி கடைக்கு வரும்போது பேசி பழகி அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் அந்த சிறுமி கூறியுள்ளார். அதேபோல சிறுமியின் தந்தையின் நண்பரான சதாசிவம் (48) என்பவர் சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்லும்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இவை அனைத்தையும் சைல்ட் லைன் அதிகாரிகளிடம் சிறுமி தெரிவித்திருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு பதிவு செய்த பேரூர் காவல்துறையைச் சார்ந்தவர்கள் மதன் (17) என்ற சிறுவன் மற்றும் சதாசிவம் உள்ளிட்ட மூவரையும் சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அதோடு, 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்திருக்கிறார்கள். அதோடு, இது தொடர்பாக காவல்துறையினரின் தரப்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Post

#BreakingNewsநீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு…..! பொதுமக்கள் அலறல் கோவையில் பரபரப்பு…..!

Thu Mar 23 , 2023
கோவை மாவட்ட நீதிமன்றம் வழக்கம் போல என்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத விதத்தில் கவிதா என்ற பெண்ணின் மீது அவருடைய கணவர் திராவகத்தை வீசி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்கத்தில் காயமடைந்த கவிதா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதோடு திராவக வீச்சு சம்பவத்தை தடுக்க முயற்சித்த வழக்கறிஞர் மீதும் திராவகம் பட்டதில் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சென்ற […]

You May Like