பெற்ற தாயாக இருந்தாலும் சரி, உடன் பிறந்த சகோதரியாக இருந்தாலும் சரி, அல்லது தான் பெற்ற மகளாக இருந்தாலும் சரி பெண்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை என்பது எப்போதும் இருக்க வேண்டும்.
ஆண் என்பவன் எப்போதும் பெண் குலத்திற்கு பாதுகாப்பாக தான் இருக்க வேண்டுமே தவிர, பெண்ணை அச்சுறுத்தும் ஒரு மிருகமாக இருக்கவே கூடாது.
பெண்ணை விட ஆணை பலசாலியாக கடவுள் படைத்ததற்கு ஒரே காரணம் பெண் பூ போன்றவள், மென்மையானவள் அவளை பாதுகாக்கும் ஒரு அரணாக ஆண் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால் உடலளவில் ஆணை விட பெண் வலிமையானவள் அல்ல என்று சொல்கிறார்கள். ஆனால் பெண்கள் செய்யும் ஒரு சில செயலை ஆண் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கூட பார்க்க மாட்டான்.
மேலும் பெண்கள் உடலளவில் வலிமையற்றவர்களாக இருந்தாலும், மனதளவில் ஆணை விட, பெண் வலிமையானவள் என்பதை பல சமயங்களில் ஆண் உணர்ந்து இருப்பான்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் பெரிய கோட்டை குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி (27) இவர் நேற்று முன்தினம் கல்லாவி பகுதியில் கார் ஓட்டி சென்று இருக்கிறார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிலர் அவருடைய காரை வழிமறித்து வேகமாக காரை இயக்குவதாக தெரிவித்து, ரேவதியை தாக்கி உள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக ரேவதி கல்லாவி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, விசாரணை நடத்திய காவல்துறையினர், கல்லாவி மேட்டு தெருவை சேர்ந்த ரவிவர்மா (30) ராஜ்குமார் (32)சுரேஷ் (36) பிரசாந்த்(30) உள்ளிட்ட 4 பேரை அதிரடியாக கைது செய்தனர்.