fbpx

கொடுத்த கடனுக்கு மேலாக வட்டி கேட்டு மிரட்டிய பெண்! மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி!

நாட்டில் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடனாக பணத்தை வாங்கிக் கொண்டு, பின்பு அந்த பணத்தை கட்டாமல் தலைமறைவாகி பலர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.அந்த வங்கி நிர்வாகம் சார்பாகவும், மத்திய அரசு சார்பாகவும் அவர்களை பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அவர்கள் எளிதில் சிக்குவதில்லை.ஆனால் விவசாயத்தை தவிர்த்து வேறு எதுவும் தெரியாத சில அப்பாவி மக்கள் விவசாயத்திற்காக வாங்கும் சில லட்ச ரூபாய் கடனுக்காக அந்த விவசாயிகள் படும் துன்பம் சொல்லி மாலாது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பெரிய நெசநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம், இவருடைய மகன் ராஜ்குமார்(39). விவசாயியான இவர், நேற்று முன்தினம் மாலை விஷம் அருந்தி அதன் மூலமாக மயக்கமடைந்து கிடந்திருக்கிறார். இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜ்குமார் பூச்சி மருந்து குடித்திருப்பதாக தெரிவித்து, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக வேப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், ராஜ்குமார் பெரிய நெசலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடந்த 2018 ஆம் வருடம் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதேபோல சிறுபாக்கத்தை அடுத்துள்ள அடரி களத்தூரை சேர்ந்த ஒரு நபரிடம் 2 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளார். அதில் வட்டியுடன் சேர்த்து அந்த பெண்ணுக்கு 13 50 லட்சமும், மற்றொரு நபருக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார் ராஜ்குமார்.

இந்த சூழ்நிலையில் தான் நேற்று முன்தினம் ராஜ்குமாரின் வீட்டிற்கு வந்த கடன் வழங்கிய அந்தப் பெண் தனக்கு வட்டியுடன் சேர்ந்து மொத்தமாக 32 லட்சம் கொடுக்க வேண்டும். இதில் 13.50 லட்சம் மட்டுமே கொடுத்திருப்பதால் மீதமுள்ள பணத்தை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். கடன் கொடுத்த நபரும் வீட்டிற்கு வந்து தனக்கு மீதமுள்ள 3 லட்சம் ரூபாய் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

இதற்கிடையில், இந்த விவகாரத்தால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ராஜ்குமாரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார் கடன் கொடுத்த இருவரும். இதனால் மனம் நொந்து போன ராஜ்குமார், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது இந்த விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

என் மீது சந்தேகப்படுகிறாயா? கடுப்பில் மனைவி கணவர் எடுத்த விபரீத முடிவால் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 3 பேர் தற்கொலை!

Fri Dec 9 , 2022
கணவன் மனைவிக்குள் அன்பு இருப்பது மிகவும் அவசியம்தான், ஆனால் அதே அன்பு ஒரு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டால் பல விபரீதங்களை சந்திக்க நேரலாம்.பலர் மனைவியின் மீது அன்புடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு மனைவிமார்களை பல சமயங்களில் சங்கடங்களில் ஆழ்த்தி வருகிறார்கள். அந்த வகையில், திருச்சி திருவானைக்காவல் ஐயப்பன் வெட்டி தெருவில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் லட்சுமணன், அவருடைய மனைவி வசந்தா(68). இந்த தம்பதியினரின் ஒரே மகன் […]
கள்ளக்காதலி வீட்டில் டிரைவர் தற்கொலை

You May Like