ராமநாதபுரம் மாவட்டம் லாந்தை ஊராட்சி எல். கருங்குளம் கிராமத்தை வசித்து வருபவர் கருப்பையா. இவரது மகள் கௌசல்யா வயத(21). இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்பவருடன்டன் கடந்த மாதம் 13 ஆம் தேதி திருமணம் நடந்தது. கடந்த ஆறாம் தேதி அன்று புதுமண ஜோடிகள் இருவரும் பனை குளம் பகுதியில் உள்ள சொந்தக்காரர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் 9-ஆம் தேதி அன்று எல்.கருங்குளத்திற்கு வந்த கவுசல்யா விஷயத்தை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றார். அவரது குடும்பத்தினர் கவுதல்யாவை காப்பாற்றி சாயங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேலும் அங்கிருந்து சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பிரைவேட் ஹாஸ்பிடலில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கவுசல்யா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கௌசல்யாவின் தந்தை கருப்பையா அளித்த புகாரின் அடிப்படையில் திருவுத்திரகோசைமங்கை காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆன ஒரு மாதத்தில் கவுசல்யா தற்கொலை செய்து கொண்டதால், இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.