பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு பல கனவுகளுடன் காலடி எடுத்து வைக்கும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது இதற்கு ஒரு முடிவே இல்லையா என்ற ஆதங்கம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனதில் எழுகிறது.
அந்த வகையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் ஆர் எஸ் ஆர் கல்லூரியில் மூத்த மாணவர்களின் அச்சுறுத்தல் காரணமாக, மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனந்த சகரை சேர்ந்த பிரதீப் என்பவர் 2ம் ஆண்டு ஈசிஇ படித்து வந்தார். இத்தகைய நிலையில் காவாலி ரயில் நிலையம் அருகே அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த மாணவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மூத்த மாணவர்களின் ராகிங் தொல்லை தான் அவருடைய மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்கள். ஆனால் கல்லூரி நிர்வாகம் சார்பாக இதுவரையில் எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை.