fbpx

கண் முன்னே விஷமறுந்தி தற்கொலை செய்து கொண்ட விவசாயி….! வேடிக்கை பார்த்த காவல்துறை….!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விவசாயத்திற்கு இயன்ற சூழ்நிலையும், தட்பவெப்ப நிலையும், விவசாயம் செய்வதற்கான நிலமும் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு உணவளிக்கும் விவசாயியையும் சரி, விவசாயத்தையும் சரி யாருமே மதிப்பதில்லை.வடமாநிலங்களில் சென்று பார்த்தால் விவசாயம் என்பது முற்றிலுமாக அழிந்து போயிருக்கிறது. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் கோதுமை விளைச்சல் நன்றாக இருக்கிறது.

தற்போது இருக்கின்ற சூழ்நிலையில், விவசாயத்தை யாருமே பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்த விவசாயம் முற்றிலுமாக அழிந்து போனால் மனித வாழ்க்கை திண்டாட்டம் ஆகிவிடும் என்பது தெரிந்தே பலர் இந்த விவசாயத்தை அலட்சியப்படுத்துகிறார்கள்.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் காவலர்கள் முன்னிலையில், விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், இதனை கண்டு கொள்ளாமல் காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் குள்ளக்குண்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டி, இவர் ஒரு விவசாயி சிறுமலை அடிவார பகுதியில் இருக்கின்ற அவருக்கு சொந்தமான நிலத்தை பள்ளிப்பட்டியைச் சார்ந்த ஒரு சிலர் அச்சுறுத்தி அவரிடம் இருந்து பறிக்க முயற்சி செய்வதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாண்டி அவருடைய மகன் சதீஷ் கண்ணன் போன்றோர் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருந்தார்கள்.

ஆனாலும் இந்த புகார் தொடர்பாக காவல்துறையினரின் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே விவசாயி பாண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆனாலும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

மேலும் இதன் காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளான பாண்டி கடந்த 7ம் தேதி அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படாத கண்டித்து தாம் மறைத்து வைத்துக் கொண்டு வந்திருந்த விஷத்தை காவலர்கள் முன்னிலையில் குடித்தார்.

ஆனால் அங்கு இருந்த காவலர்கள் அவரை தடுப்பதற்கோ அல்லது சமாதானம் செய்வதற்கோ துளி அளவும் முயற்சி செய்யவில்லை. மாறாக அவர் விஷமருந்துவதை தங்களுடைய கைபேசியில் படம் பிடிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தார்கள். ஆனால் காவல்துறையினர் அவரை தடுப்பதற்கோ அல்லது சமாதானம் செய்வதற்கு முயற்சி செய்திருந்தால் அவரை நிச்சயமாக காப்பாற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காவலர்கள் அனைவரும் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருக்க அவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஆய்வாளர் சண்முக லட்சுமி விவசாயி நடித்துக் கொண்டிருப்பதாகவும், விஷம் குடிப்பதாக தெரிவித்துவிட்டு முகத்தில் மட்டும் விஷத்தை தெளித்து வைத்திருப்பதாகவும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இவை அனைத்தும் வீடியோவாக தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை எடுத்து அவர் வழங்கிய புகார் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனாலும் புகார் வழங்கியவுடன் நடவடிக்கை மேற்கொள்ளாமல் புகார்தாரர் உயிரிழந்த பிறகு அந்த புகாரின் மீது நடவடிக்கை மேற்கொள்வது தேவையில்லாதது என்று காவலர்களுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விவசாயி வழங்கிய புகாரின் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியத்துடன் செயல்பட்ட ஆய்வாளர் சண்முக லட்சுமி தற்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

Next Post

ஏடிஎம் மையத்திற்கு வெடி வைத்த கொள்ளையர்கள்..!! வங்கி மேலாளருக்கு போன அலெர்ட்..!! கடைசியில் நடந்த சம்பவம்..!!

Tue Feb 14 , 2023
வெடி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை தகர்த்தி பணம் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு எழும்பலாசேரி பகுதியில் அமைந்திருக்கும் ஏடிஎம் மையத்தில் கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள், வெடி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை தகர்த்தி பணம் கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர். ஆனால், வெடி வெடித்ததும் வங்கியின் கிளை மேலாளருக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இதனை சுதாரித்துக் கொண்ட வங்கி […]

You May Like