அசாமில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை பஞ்சாயத்தார் உத்தரவின் படி மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அசாம் மாநிலம், நாஹோன் மாவட்டம், லாலுங் கிராமத்தில் வசித்து வந்தவர் சபிதா (35) இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சபிதாவை கடந்த வாரம் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த கிராமத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் அவர்கள் யார் என தெரிந்து கொண்ட கிராமத்தார், நேற்று இரவோடு இரவாக அவர்கள் அனைவரையும் அழைத்து வந்து பஞ்சாயத்தை கூட்டி விசாரணை நடத்தினார். பஞ்சாயத்தின் விசாரணையில் போர்டோலோய் (30) என்ற வாலிபர் அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதை அடுத்து பஞ்சாயத்தின் தீர்ப்பு இப்படி வந்தது. அந்த இளைஞரை உயிருடன் எரிக்குமாறு பஞ்சாயத்தார் தீர்ப்பளித்தனர். இதை தொடர்ந்து அந்த வாலிபரை அங்கேயே நிர்வாணமாகிய கிராம மக்கள், அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டினார். பின்னர் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர். இதனால் அலறி துடித்த அந்த வாலிபர் சிறிது நேரத்தில் உயிர் இழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.