திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள சன்னதி தெருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடல் குப்பைத் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசவே மருத்துவமனை ஊழியர்கள் அந்த குப்பைத் தொட்டியை சோதனை செய்தனர். அப்பொழுது குப்பைத் தொட்டியில், பிறந்த குழந்தையின் சடலம் பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பை தொட்டியில் வீசியிருந்தனர்.
உடனே காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ட்ரெய்னிங் டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையிலான வந்தவாசி தெற்கு காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலத்தை தொப்புள் கொடியை கூட அறுக்காமல் சிறிய பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பைத் தொட்டியில் போட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.