fbpx

வங்கக் கடலில் விரைவில் உருவாகிறது புயல்….! புயல் சின்னத்தின் பெயர் என்ன தெரியுமா…?

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. ஒருபுறம் வெயில் வரலாறு காணாத அளவிற்கு இருந்தாலும் மறுபுறம் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

தற்சமயம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதோடு இது புயலாக உருமாற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த விதத்தில் சரியாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டு இருக்கும் இந்த காற்றின் சுழற்சி எதிர்வரும் 6 அல்லது 7ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து, வரும் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் அந்த காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக மாறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்சமயம் இது ஒடிசாவை நோக்கி நகரலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் காற்றின் வேகத்தை பொறுத்து இதன் திசை மாறுபடலாம் ஆகவே தமிழகத்திலும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

ஒரு வேலை இந்த புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு மோக்கா என்று பெயரிடப்படும் இந்த பெயரை ஏமன் நாடு சூட்டி இருக்கிறது. இதனால் மீனவர்கள் வரும் ஏழாம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Post

டியூசன் படிக்க வந்த 16 வயது சிறுவனை படுக்க வைத்து..!! ஆசிரியை மீது பாய்ந்தது போக்சோ..!!

Thu May 4 , 2023
துறையூரில் டியூசன் பயில வந்த 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி (43) . துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த இவர், சித்திரப்பட்டி பகுதியில் தங்கி இருந்து டியூஷன் எடுத்து வருகிறார். அதே பள்ளியில் படிக்கும் துறையூர் பகுதியைச் சேர்ந்த 16 […]

You May Like