துருக்கி நாட்டில் உள்ள கந்தார் என்ற கிராமத்தில், மெஹ்மத் எர்கான் என்பவரின் இரண்டு வயது பெண் குழந்தை வீட்டின் பின்புறம் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென்று குழந்தை அலறல் சத்தம் கேட்க, பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிச்சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த குழந்தை வாயில் ஒரு பாம்பைக் வைத்து கடித்துக்கொண்டு நின்றுள்ளது.
இதைப் பார்த்த அவர்கள் குழந்தையின் வாயிலிருந்து பாம்பை பிடுங்கிப் போட்டனர். பாம்பு அசையாமல் கிடந்துள்ளது. குழந்தை கடித்ததில் பாம்பு உயிரிழந்துள்ளது. அதன் பிறகு குழந்தையை மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்றனர். இது குறித்துப் குழந்தையின் தந்தை மெஹ்மத் எர்கான் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என் குழந்தை முதலில் பாம்பைக் கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்ததாகவும், பாம்பு குழந்தையைக் கடித்தவுடன் அதிர்ச்சியில் பாம்பைத் திரும்பக் கடித்து குழந்தை கொன்றதாக கூறினர் எனத் தெரிவித்துள்ளார்.
ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்ட குழந்தை 24 மணிநேரம் மருத்துவர்களின் கண்காணிப்பிற்குப் பிறகு நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர் மேலும். துருக்கியில் உள்ள பாம்பு வகைகளில் 12 வகையான பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை வாய்ந்தது. குழந்தை நலமாக உள்ளதால் விஷமில்லாத பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.