fbpx

கில்லி விளையாட்டால் வந்த வினை குத்தி கொலை செய்யப்பட்ட இளைஞர்…..! அரியலூர் அருகே பரபரப்பு…..!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சந்தை தொகுப்பு என்ற பகுதியில் கில்லி விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக, இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சந்தை தோப்பு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தால், இளைஞர்கள் கில்லி விளையாடி வந்தனர். மாலை வெகு நேரம் இளைஞர்கள் கில்லி விளையாட்டை விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு நடுவே விளையாட்டில் இளைஞர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை பெரிதாகவே நாராயணன் என்பவரின் மகன் குணசீலன்(24) என்ற நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். குற்றவாளிகள் தப்பி சென்றுவிட்ட நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆண்டிமடம் காவல்துறையினர் தப்பி சென்றவர்களை தீவீரமாக தேடி வருகிறார்கள்.

Next Post

சாட்ட விரோதமாக ட்ரோன்களை பறக்க விட்ட 3 இளைஞர்கள் அதிரடி கைது…..! சென்னை காவல்துறையினர் நடவடிக்கை…..!

Mon Mar 20 , 2023
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் போன்ற நீதிமன்றங்கள் உள்ள பகுதிகளிலும் மற்றும் அரசு சார்ந்த முக்கிய கட்டடங்கள் இருக்கின்ற பகுதிகளிலும், பொது இடங்களிலும் தேவையில்லாமல் ட்ரோன்களை பறக்க விடக்கூடாது என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயில் வருகை நேற்று முன்தினம் கேமரா ஒன்று பறந்து வீடியோ கேமராவில் படம் எடுத்துக் கொண்டிருந்தது. இந்த ட்ரோனை பறக்க விட்டதாக தெரிவித்து சென்னை மாநகர காவல் துறையினர் வித்யாசாகர்(27), […]
ட்ரோன் பறக்க அதிரடி தடை..!! மீறினால் கடும் நடவடிக்கை..!! காவல்துறை எச்சரிக்கை..!! எங்கு தெரியுமா?

You May Like