தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், கடந்த மே மாதம் 27 ஆம் தேதி ஒருவர் பேசியதற்கு எதிர் கருத்து கூறிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபர் சர்மாவின் கருத்துக்கு, இந்தியா மீது இணையதள தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வலைதளங்களை, இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து செயல்படும் ஹேக்கர் குழுக்கள் ஹேக்கிங் செய்துள்ளன.
இதனை குஜராத் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். அவற்றில் டிராகன் போர்ஸ் மலேசியா மற்றும் ஹேக்டிவிஸ்ட் இந்தோனேசியா ஆகிய இரு ஹேக்கர் குழுக்களை அதிகாரிகள் ப உறுதிப்படுத்தியுள்ளனர். இதுபற்றி குஜராத்தின் ஆமதாபாத் நகர இன்டர்நெட் சைபர் கிரைம் பிரான்ச் சப் இன்ஸ்பெக்டர் அமித் வசவா கூறும்போது, இரண்டாயிரத்திற்கும் அதிகமான வலைதளங்கள் ஹேக்கர் குழுக்களால் ஹேக்கிங் செய்யப்பட்டுளனஎன்றுகூறினார். இதனை தொடர்ந்து, ஆமதாபாத் சைபர் கிரைம் போலீசார், மலேசியா மற்றும் இந்தோனேசிய அரசுக்கும் இன்டர்போல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இரு ஹேக்கர் குழுக்கள் மீது லுக்-அவுட் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்த இரு ஹேக்கர் குழுக்களும், இந்தியாவின் மீது இணையதள தாக்குதலை நடத்தும்படி உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் ஹேக்கர்கள் குழுவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. அதுமட்டுமல்லாமல், அரசாங்கம் மற்றும் தொழிற்சாலைகளின் பல்வேறு வலைதளங்களும் அக் குழுக்களால் முடக்கப்பட்டு உள்ளன. இந்த ஹேக்கர்கள், ஆந்திர பிரதேச காவல் துறை மற்றும் அரசின் தகவல்களை கசிய விட்டு உள்ளனர். பான் கார் மற்றும் ஆதார் கார்டு விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. தானே காவல் துறையின் வலைதளமும் முடக்கப்பட்டுள்ளது என அமித் வசவா தெரிவித்து உள்ளார்.